News January 2, 2026

அரியலூர்: தங்கத்தை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

image

செந்துறையில் அடகு கடை ஒன்றில் பணியாற்றி வருபவர் சந்திரசேகர். இவர் செந்துறை பஸ் நிலையத்தில் 1½ பவுன் தாலி சங்கிலியை கீழே கிடந்ததாக செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதே நேரத்தில் தாலியை இழந்ததாக புகார் அளித்த இளமதி (35) என்பவரை போலீசார் அழைத்து, தாலியை மீண்டும் வழங்கினர். சந்திரசேகரின் இந்த நேர்மையான செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Similar News

News January 30, 2026

அரியலூர்: திருமண தடையை நீக்கும் முக்கிய ஸ்தலம்!

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அமைந்துள்ள, பயறணீஸ்வர ஆலயம் திருமணத்தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

அரியலூர் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

அரியலூர் அரசு கல்லூரி கலையரங்கில், பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்றது. மேலும் கருத்தரங்கில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமணை மனநல மருத்துவர் அஞ்சிதா கலந்து கொண்டு, மனநலத்தில் குறைபாடு ஏற்படும்போது அவர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான மருத்துவம் ஆகியவை குறித்து, பட காட்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News January 30, 2026

அறியடலுர்: டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோடு பகுதியை சார்ந்த வேல்முருகன் மனைவி மாலதி (44). பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது டிராக்டர் மோதி உயிரிழந்துள்ளார். மேலும் மீன்சுருட்டி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!