News November 22, 2025
அரியலூர்: சரக்கு வாகனம் மோதி விபத்து

அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற சரக்கு வகான ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் சைக்கிளில் வந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 22, 2025
அரியலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இம்மைங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் வாக்கு செலுத்தும் மையங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
அரியலூரில் அதிகபட்சமாக 6CM மழை பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.21) காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. அவ்வகையில் இன்று (நவ.22) காலை 6 மணி வரை அதிகபட்சமாக மீன்சுருட்டி பகுதியில் 6CM மழை பதிவாகியுள்ளது. மேலும் ஓட்ட கோவில் பகுதியில் 36 மில்லி மீட்டர், காட்டாத்தூர் பகுதியில் 23.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.


