News November 6, 2025
அரியலூர்: சட்ட உதவி பாதுகாப்பு மையம் துவக்கம்

அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அரியலூரில் உள்ள பல்துறை வளாகத்தில் நவம்பர் 5-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர் வாலண்டினா கலந்துகொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 6, 2026
அரியலூர்: தேர்வர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-II முதன்மை தேர்வானது வருகிற 08ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 02.30 மணி முதல் 05.30 வரை நடைபெறவுள்ளது. அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இத்தேர்வினை காலையில் 91 மற்றும் மாலையில் 92 தேர்வர்கள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
அரியலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் வளமிகு வட்டாரம் திட்டத்தின் கீழ் மத்திய/மாநில அரசு பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 11ம் தேதி முதல் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களால் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!