News January 22, 2026

அரியலூர்: கொள்முதல் நிலையங்களில் நெல்லின் விலை?

image

அரியலூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு என்ன விலை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில், “A கிரேட் நெல்லுக்கு, மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ.2,545; பொதுரக நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ 2,500 விலை வழங்கப்படும்.” என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 22, 2026

அரியலூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்!

image

அரியலூர் வழியாக தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே புதிதாக அம்ரித் பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அரியலூர் ரயில்நிலையத்தில் இரவு 7.33 மணிக்கு வந்தடையும். மேலும் வாராந்திர சிறப்பு ரயிலானது, வருகிற ஜன.23-ஆம் தேதி திருவனத்தபுரம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கொடியசைத்து தொடக்கி வைக்கப்படும் என்று, திருச்சி கோட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

அரியலூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

இளைஞர் விளையாட்டு திருவிழ: அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 25.1.2026 அன்று தடகளம்-100மீ மற்றும் குண்டு எறிதல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) வாலிபால், கேரம், ஆகிய விளையாட்டுகளிலும் 27.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி, கபாடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) நடைபெற உள்ளது.

error: Content is protected !!