News October 13, 2025

அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது!

image

தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மீது தா.பழூர் காவல் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ராஜ்குமாரை கடந்த வாரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதயடுத்து இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Similar News

News March 10, 2026

அரியலூர் விவசாயிகளுக்காகக் குளிர்பதன கிடங்கு!

image

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை விளைப் பொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலம் அதிநவீன குளிர்பதன கிடங்கு அரியலூர், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள்,அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள்,அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!