News December 19, 2025
அரியலூர்: காவல் வாகனங்களை ஆய்வு செய்த SP

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விஷ்வேஷ் பா சாஸ்திரி காவல் அலுவலகத்தில் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் காவல்துறையினர், தலைக்கவசம் மற்றும் ஒளிரும் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் பூட்டி இருக்கும் வீடுகள் முன்பு சந்தேகத்திற்கு இடமான செயல்கள் நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News December 23, 2025
அரியலூர்: 7 1/2 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

அரியலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட போலீசார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும் 36 கஞ்சா வழக்குகள் போடப்பட்டு 7.115 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் 7.472 கிலோ கஞ்சா நேற்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தீ வைத்து அழிக்கப்பட்டது.
News December 23, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 26.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 23, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (22.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள், மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.


