News December 17, 2025

அரியலூர்: கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு

image

திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்று வரும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளை திருச்சி மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் ரா.காஞ்சனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரைவெட்டியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, படகு வசதி உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.

Similar News

News December 18, 2025

அன்புமணி மகள்: ஜெயங்கொண்டம் தொகுதிக்கு விருப்பமனு

image

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் தமிழ் மறவன் சென்னையில், பாமக சார்பில் விருப்ப மனு அளிக்கும் நிகழ்வில், அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா, ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்ப மனு அளித்தார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News December 18, 2025

அரியலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

அரியலூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

அரியலூர்: தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டிச.20-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 8, 10, 12 மற்றும் டிகிரி முடித்த தகுதியுடைய நபர்களை 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!