News June 15, 2024
அரியலூர்: ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கும்பகோணம் கோட்டத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
அரியலூர்: பரப்புரையில் ஈடுபட்ட திமுகவினர்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், திமுகவினர் வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டனர். திமுக அரசின் சாதனைகளையும் செயல் திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வண்ணமாக, வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
அரியலூர்: தூக்கி வீசப்பட்டு காதலர்கள் பலி

இடுக்கி மாவட்டம் கேரளாவை சேர்ந்த ஆதித்யா மற்றும் மருங்கலா குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சங்கர் மகள் சரண்யா இருவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு ஆமணக்கு தோண்டி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
News March 2, 2026
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று மார்ச் மாதத்தில் 2, 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


