News December 25, 2025
அரியலூர் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அரியலூர் என்ற பெயர், “அரி” (விஷ்ணு) மற்றும் “இல்” (இல்லம்) ஆகிய சொற்களின் சேர்க்கையால் உருவானது. இது விஷ்ணுவின் இருப்பிடம் அல்லது இல்லம் எனப் பொருள்படும். பின்னர் இது “அரியிலூர்” என்றும், அதிலிருந்து அரியலூர் எனவும் மருவியதாகக் கூறப்படுகிறது. அரியலூர் பகுதி வைணவ வழிபாட்டுத் தலங்கள் அதிகம் உள்ள இடமாக இருந்ததால், இப்பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 28, 2025
அரியலூரில் நாளை மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(டிச.29) நடைபெற உள்ளது. எனவே அரண்மனைகுறிச்சி, அன்னிமங்கலம், பாளையபாடி, க.மேட்டுதெரு, திருமழபாடி, குலமாணிக்கம், செம்பியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
அரியலூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
அரியலூர்: மணல் கடத்தியர் தப்பி ஓட்டம் – போலீசார் தேடல்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அறங்கோட்டை பகுதிகளில் நேற்று(டிச.27) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் சாலையின் வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ய முயன்ற போது, மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் வண்டியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.


