News September 9, 2025
அரியலூர்: உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நீதி உதவி

அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையத்தில் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதல்நிலைக் காவலர் செல்வம் அவர்களது குடும்பத்திற்கு அரியலூர் மாவட்ட காவல்துறையினரின் பங்களிப்பு நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி வழங்கினார்கள். உடன் செந்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையின் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
அரியலூர்: மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் நல அமைப்பு சிறப்பு பணி (STF) மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் குழந்தை கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சமூக நல அலுவலர், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சகோதர அலுவலர்கள் கலந்துகொண்டு செயல் திட்டங்களை அமைத்தனர்.
News September 10, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு

செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகளத்தூர், துளார் மருவத்தூர் மற்றும் பொன்பரப்பி ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
News September 9, 2025
விளையாட்டு வீரர்களுடன் சிலம்பம் சுற்றிய எம்எல்ஏ

இன்று (9.9.2025) செவ்வாய்க்கிழமை காலை, அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில்,
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் சிலம்பம் சுற்றி போட்டியினை துவக்கி வைத்தனர்.