News November 22, 2025

அரியலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

வெங்கனூரை சேர்ந்வர் கவியரசன்(23). இவர் மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வெங்கனூர் காவல் நிலையம் முன்பு, போலீசாரை தாக்கி கத்தியால் கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரை பேரில் கலெக்டர் ரத்தினசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Similar News

News February 2, 2026

அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் 45 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும், நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது என்றும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள். சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். SHARE பண்ணுங்க!

News February 2, 2026

அரியலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி, ஆண்டிமடம், அய்யூர், பெரியக்கருக்கை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.03) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் நல்லூர், காடுவெட்டி, அகரம், கங்குழி, குளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News February 2, 2026

அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (பிப்.1) இரவு 10 முதல், காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!