News November 13, 2025
அரியலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதனை பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நவ.30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
அரியலூர்: ரூ.1 லட்சம் பரிசு வேண்டுமா?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலத்துறை அலுவலகத்தில் 26/11/2025-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என அரியலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 13, 2025
அரியலூர்: தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள், டெல்லி குண்டு வெடிப்பை அடுத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாது அவசர அழைப்புக்கு 100-ஐ அழைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
News November 13, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


