News September 11, 2025

அரியலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் (செப்.13) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான மலர்வாலண்டினா தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றங்களில் செயல்படும் சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 223333 தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Similar News

News September 11, 2025

அரியலூர்: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 11, 2025

அரியலூர்: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

image

அரியலூர் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

அரியலூர்: புதிய பேருந்துகள் துவக்கம்

image

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் கிளை சார்பில் இரண்டு புதிய பேருந்துகளையும் மற்றும் விழுப்புரம் கோட்டம் சார்பில் குளிர்சாதன பேருந்து ஒன்றினையும் என மூன்று புதிய பேருந்துகளையும் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!