News August 25, 2025

அரியலூர் இரவு ரோந்து விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

Similar News

News August 25, 2025

அரியலூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 25, 2025

ஆரியலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

ஆரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தைக்குளம் மற்றும் ஓலையூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், இன்று (ஆகஸ்ட் 25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், ஓலையூர், பெரியதுக்குறிச்சி, விழுடுடையான் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 25, 2025

அரியலூர்: விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரகுபதி, ரவிச்சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், விழா ஏற்பாட்டாளர்கள் அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!