News November 4, 2025
அரியலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 4, 2025
அரியலூர்: தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஆமணக்கந் தோண்டி பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு 10 மணி அளவில் நடந்து சென்ற நபர் மீது தனியார் பேருந்து மோதியதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 4, 2025
அரியலூர்: சாலை விபத்தில் முகம் சிதைந்து ஒருவர் பலி!

தா.பழூர், தாதம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (25). இவர் நேற்று இரவு தனது நண்பர் சிவா (25) என்பவரை அழைத்துக் கொண்டு தா.பழூரில் இருந்து காரைக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்றபோது, மகேஷ் ஓட்டி சென்ற பைக், லாரி ஒன்றின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மகேஷ் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிவா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 4, 2025
அரியலூர்: வாக்காளர் கணக்கெடுப்பு பணி துவக்கம்

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று (நவ.04) முதல் தொடங்குகிறது. இப்பணித் தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாடு தொலைப்பேசி எண்.1950-ஐ வாக்காளர்கள் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


