News January 5, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று(ஜன.4) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.5) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 7, 2026

அரியலூர்: 3 நாட்களுக்கு சிறப்பு சேவை அறிவிப்பு

image

பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட சேவைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இந்திய வெளியுறவு துறை பி.எஸ்.கே. மொபைல் வேன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்ட பொதுமக்களின் தேவைக்காக இந்த வாகனம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஜன.8 (நாளை) முதல் ஜன.10-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News January 7, 2026

அரியலூரில் 347 பேர் கைது!

image

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் – உதவியாளர்கள் என 347 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

News January 7, 2026

அரியலூர் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் இயலாது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவைத்துள்ளார்.

error: Content is protected !!