News December 22, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.21) இரவு 10 மணி முதல் இன்று (டிச.22) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 22, 2025
அரியலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <
News December 22, 2025
அரியலூரில் 496 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது. மொத்தம் 1870 பேர் விண்ணப்பித்த நிலையில், 1374 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 496 பேர் எழுதவில்லை. தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் நடைபெற்ற தேர்வை காவல் துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பார்வையிட்டனர்.
News December 22, 2025
அரியலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தில் 2025-26-ம் கல்வியாண்டில் பயன்பெற அரசு கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் தங்களது கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.


