News November 3, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (நவ.02) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 3, 2025
அரியலூர் அருங்காட்சியகம் பற்றி ஓர் பார்வை!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசியில் புதைபடிவ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் டைனோசர் முட்டைகள் மற்றும் பல புதைபடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் புவியியல் அமைப்பில் கடல் புதைபடிவங்கள் அதிகம் காணப்படுவதால், இந்த அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அருங்காட்சியகம், மாணவர்களுக்கு புவியியல் மற்றும் தொல்லியல் பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
அரியலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
அரியலூரை ஆண்ட முக்கிய ஆட்சியாளர்கள்

அறியலூரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள்: ▶பல்லவர்கள் காலம்(கி.பி 6-9’), ▶சோழப் பேரரசு காலம் (கி.பி 850-1279), ▶பாண்டிய மற்றும் ஹொய்சளர்கள் காலம் (கி.பி1268-1370), ▶விஜயநகரப் பேரரசு (கி.பி 1371 – 1685), ▶பாளையக்காரர்கள் (கி.பி. 1550 – 1817) ஆகியோர் ஆண்டனர். பின்பு அதை தொடர்ந்து பீஜப்பூர் சுல்தான், மராட்டியர்கள், கர்நாடக நவாப்புகள் மற்றம் ஆங்கிலேயர்கள் ஆகியோரும் ஆண்டதாக கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க…


