News August 7, 2024

அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காரீப் பருவத்தில் 2023-24ஆம் ஆண்டு சாகுபடி செய்த நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்குடன் அருகிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை அணுகுமாறு அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News November 11, 2025

அரியலூர்: விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு!

image

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தாட்கோ மூலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் (நவ.10) இரவு 10 மணி முதல் (நவ.11) காலை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 10, 2025

அரியலூர்: 334 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இல்ல வசதி, வீட்டு மனைபட்டா, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 334 மனுக்கள் பெறப்பட்டன.

error: Content is protected !!