News October 21, 2025
அரியலூர் அருகே முதியவர் அடித்து கொலை

செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து (75). அதே தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள ஒரு புளியந்தோப்பில் சம்பவத்தன்று இரவு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் கட்டையால் முதியவர் மருதமுத்துவை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
Similar News
News February 1, 2026
அரியலூர் ஒரு ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’

அரியலூர் மாவட்டம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கடல் விலகியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு இனங்கள், சகதி மற்றும் சதுப்புநிலத்தில் மூழ்கி படிமங்களாகின. எனவே அரியலூர் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
News February 1, 2026
அரியலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 1, 2026
இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.31) இரவு 10 முதல் இன்று (பிப்1)3 காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


