News March 31, 2024
அரியலூர் அருகே தகராறு

விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மனோகரன் ,தூய்மை காவலர் அன்புமணி ஆகியோர் குஞ்சு வெளி கிராமத்திற்கு வீட்டு வரி வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர்.அப்பொழுது குஞ்சு வெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் அவர்களை திட்டியாதகவும் இது குறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.
Similar News
News April 4, 2025
அரியலூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
News April 4, 2025
செந்துறை அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி

செந்துறை பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை நேற்று மாலை பெய்தநிலையில், சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்பவர் மாடு மேய்க்கும்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் குவாகம் போலீசார் இந்திராகாந்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News April 3, 2025
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.