News April 25, 2024
அரியலூர் அருகே குவிந்த கூட்டம்

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
Similar News
News August 21, 2025
அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
அரியலூர்: இலவச காதொலிக் கருவி வழங்கல்

தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் இலவச காது கேட்கும் கருவிகளை பெறலாம். கடந்த 3 வருடங்களுக்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் அரியலூர் மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
அரியலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூர், பெரியகருக்கை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, காட்டாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!