News April 8, 2024
அரியலூர்: அம்மனுக்கு மிளகாய் சண்டி யாகம்

அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் இன்று நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மகா சண்டியாகத்தில் பக்தர்கள் புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டது.
Similar News
News February 13, 2026
அரியலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <
News February 13, 2026
அரியலூர்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் செந்துறையைச் சேர்ந்த ஆனைமுத்து என்பவர் காரில் பயங்கரமான ஆயுதங்களுடன் சென்றதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
News February 13, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.12) இரவு 10 முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


