News May 6, 2024
அரியலூரில் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.25 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி – 23, அரசு உதவிபெறும் பள்ளி – 6, மெட்ரிக் பள்ளி – 15, சுயநிதி பள்ளி – 9 ஆக மொத்தம் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Similar News
News November 20, 2024
தமிழ்நாடு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவதற்கு தகுதியான பட்டியலினத்தை சேர்ந்தோர், இதற்கான விண்ணப்பத்தை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில் பெற்று நவம்பர் 26 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
News November 19, 2024
201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் 23.11.2024 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன. இக்கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 19, 2024
மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
அரியலூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அங்கு பணியாற்றும் ராஜீவ்காந்தி என்ற இயற்பியல் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.