News September 25, 2025
அரியலூரில் 1,500 மரக்கன்றுகள் நடல்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, அரியலூர் வாரணவாசி ஊராட்சியில் புதன்கிழமை 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பனை விதைகள் உட்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பசுமை குறித்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
Similar News
News September 25, 2025
அரியலூர்: நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்ட போட்டிக்கு இணையான, நெடுந்தூர ஓட்ட போட்டிகள் செப்டம்பர் 28ஆம் தேதி காலை 7:30 மணியளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் போட்டிகளின் விவரங்கள் தொடர்பாக, அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News September 25, 2025
அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் இன்று காலை வரை பெய்த மழையளவு விபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் வெளியிடபட்டுள்ளது. அதன்படி அரியலூரில் 0.4 மி.மீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 27 மி.மீட்டரும், செந்துறையில் 11 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 5 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 13 மி.மீட்டரும், தா.பழூரில் 12 மி.மீட்டரும் மழைபதிவாகியுள்ளது. மேலும் மொத்த மழையளவு 68.4 மி.மீட்டர் ஆகும்.
News September 25, 2025
அரியலூர் இளைஞர்களே Bank வேலை வேண்டுமா?

அரியலூர் மக்களே தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? உங்களை தேடி வரும் Bank வேலையை மிஸ் பண்ணாதீங்க! பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <