News April 13, 2025
அரியலூரில் மாவட்டத்தின் வெப்பநிலை தகவல்

அரியலூர் மாவட்டத்தின் வெப்பநிலை அரியலூர் 42°c டிகிரி, செந்துறை 39°c டிகிரி, ஜெயங்கொண்டம் 41°c டிகிரி, உடையார்பாளையம் 39°c டிகிரி, ஆண்டிமடம் 39°c டிகிரி, ஆர் எஸ் மாத்தூர் 39°c டிகிரி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வெயில் காலங்களில் அதிக தண்ணீர் குடிப்பது, நீர் ஆகாரம் குடிப்பது போன்றவை வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News October 14, 2025
அரியலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!
News October 14, 2025
அரியலூர் மாவட்டத்தில் 15 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 15 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
News October 14, 2025
அரியலூர்: அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.