News April 20, 2025
அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
அரியலூர்: இரண்டாம் நிலை தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான, பொதுத்தேர்வு வரும் (09.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
News November 8, 2025
அரியலூர்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


