News September 5, 2024

அரியலூரில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

image

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம்- ரூ.50/-, தொழில்பிரிவு கட்டணம் ரூ.195ஆகும். மேலும் தகவல்களுக்கு அரியலூர் – 9499055877, 04329-228408, ஆண்டிமடம் – 9499055879 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

அரியலூர்: இலவச காதொலிக் கருவி வழங்கல்

image

தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் இலவச காது கேட்கும் கருவிகளை பெறலாம். கடந்த 3 வருடங்களுக்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் அரியலூர் மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

அரியலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூர், பெரியகருக்கை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, காட்டாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!