News April 13, 2025
அரியலூரில் தமிழ் கட்டாயம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.பி. ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழ் மற்ற மொழிகளை விட முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் இந்த பெயர் பலகைகள் வைக்க பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Similar News
News April 14, 2025
அரியலூர்: தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர்

அரியலூர் மாவட்டம், திருமழபாடி எனும் ஊரில் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, மூலவர் வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோயிம் தீரும் என்பது ஐதீகம். வாழ்வில் நோயின்றி வாழ்வதற்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்
News April 14, 2025
அரியலூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 14, 2025
அரியலூரில் புத்தாண்டில் செல்ல வேண்டிய கோயில்கள்

அரியலூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் வழிபட வேண்டிய கோயில்கள். 1.திருமழப்பாடி வைத்தியநாதர் கோயில், 2.கங்கை கொண்ட சோழபுரம், 3. மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 4. கோதண்டராமசுவாமி கோயில், 5. அங்கராயநல்லூர் அய்யனார் கோயில், 6. அழகாபுரம் அழகேசுவரர் கோயில், 7. காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில், 8. கீழையூர் இரட்டை கோயில்கள், 9. அயன்தத்தனூர் சோழீஸ்வரர் கோயில், 10. ஜமதக்னீஸ்வரர் கோயில்