News July 6, 2025

அரியலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

அரியலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஜூலை 7ம் தேதி முதல் நடைபெறுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ளோர், முகாமில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இம்முகாம்களில் மட்டுமே பெறப்படும். பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News July 6, 2025

அரியலூர்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்?

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

அரியலூர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (ஜூலை 5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம்.

error: Content is protected !!