News August 25, 2024

அரவைக்காக 2,000 டன் நெல் மதுரைக்கு அனுப்பி வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2,000 டன் நெல் அரவைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Similar News

News August 5, 2025

தஞ்சை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

தஞ்சை மக்களே எச்சரிக்கை, ஆட்சியர் பெயரில் மோசடி?

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ரியங்கா பங்கஜம் பெயரிலோ அல்லது புகைப்படத்தினை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பண மோசடி ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்களில் பணம் கேட்டோ – வங்கி விவரங்கள் குறித்து அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் சைபர் கிரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தகவலை SHARE பண்ணுங்க!

News August 5, 2025

தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

image

தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி அலுவலா்கள் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் சுமார் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!