News May 16, 2024
அரவக்குறிச்சி அருகே வேன் விபத்தில் இருவர் பலி

அரவக்குறிச்சி, தடாகோவில் அருகே நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமாரின் குடும்பத்தினர் நேற்று(மே 15) ராமேஸ்வரம் சென்று திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பெயர் பலகை மீது மோதியது. இதில் துரைசாமி(74), ஷாலினி(33) ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News May 8, 2025
கரூர் மாவட்ட தாசில்தார் தொடர்பு எண்கள்!

கரூர் தாசில்தார் – 04324-260745.
அரவக்குறிச்சி தாசில்தார் – 04320-230170.
குளித்தலை தாசில்தார் – 04323-222015.
கிருஷ்ணராயபுரம் தாசில்தார் – 04323-243366.
மண்மங்கலம் தாசில்தார் – 04324-288334.
கடவூர் தாசில்தார் – 04323-251444.
புகளூர் தாசில்தார் – 04324-270370. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்.
News May 8, 2025
கரூரில் ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் வரும் மே.10ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற்றவுள்ளது. கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
News May 8, 2025
கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.