News March 9, 2025
அரவக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்து

அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை ரங்கமலை கணவாய் அருகே திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சேர்ந்த குடும்பம் வெள்ளகோவில் நாட்ராயன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது டயர் வெடித்ததில் கார் இடதுபுறம் இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க் அறிவிப்பு பலகையில் மோதி கீழே உருளாமல் நின்றது. இதனால் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை.
Similar News
News September 10, 2025
கரூர்: பழங்குடி இன மக்களுக்கு குரூப் 1 தேர்வு பயிற்சி!

கரூரில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு தாட்கோ சார்பாக முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. WWW.tahdco.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு செய்துள்ளார்.
News September 10, 2025
கரூரில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

கரூரை சுற்றியுள்ள பகுதியில் நாளை செப்டம்பர்-11 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. கரூர் மாநகராட்சி (வார்டு எண் 6, 10) கிருஷ்ணராயபுரம் (முள்ளிப்பாடி, பாலவிடுதி) ஆகிய பகுதியில் முகாம் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஜாதி சான்று, ஆதார் கார்டு திருத்தம், ரேஷன் கார்டு முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர்.
News September 10, 2025
கரூர்: பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்!

கரூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 13.09.2025 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.