News December 15, 2025
அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய 5 பேர்: அதிரடி கைது

அரவக்குறிச்சி உட்கோட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சந்திரசேகர் (52), பிரவீன் (27), மருதை (48), அமுதா (50), கதிர்வேல் (38) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 178 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 27, 2025
கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
கரூரில் வேலை வேண்டுமா? கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (27.12.2025) இடம் அரசு கலைக்கல்லூரி தான்தோன்றிமலை, கரூரில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளவிரும்பும் வேலை தேடும் இளைஞர்கள் கீழ்கண்ட படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.தொடர்புக்கு – 04324-223555, 9345261136
News December 27, 2025
கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.


