News December 14, 2025

அரவக்குறிச்சியில் மது விற்ற ஐந்து பேர் கைது

image

அரவக்குறிச்சி உட்கோட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சந்திரசேகர் (52), பிரவீன் (27), மருதை (48), அமுதா (50), கதிர்வேல் (38) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 178 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 2, 2026

கரூர்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கரூரில் கடும் அவதிக்குள்ளாகும் போலீஸ்

image

கரூரில் கோடை தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தச் சூழலில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்குச் சூரியசக்தி தொப்பிகள் (Solar Caps), இளநீர், நீர்மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் உடல்நலனைக் காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

error: Content is protected !!