News April 5, 2026
அரசை ATM-ஆக பயன்படுத்திய காங்: அண்ணாமலை

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செய்யாமல், புதுச்சேரியை வெறும் ATM-ஆக மட்டுமே காங்., பயன்படுத்தியதாகவும் சாடியுள்ளார். மத்தியில் காங்., ஆட்சியில் (2004 – 2014) இருந்தபோது ₹9,000 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும், பாஜக ஆட்சியில் (2014 – 2025) ₹26,0000 கோடி கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 14, 2026
தமிழ் புத்தாண்டு.. பண வரவு கொட்டும் 5 ராசிகள்

2026 பராபவ தமிழ் புத்தாண்டில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்கார்களுக்கு இந்தாண்டு சிறப்பாக அமையுமாம். பணவரவு, வீடு, வாகன யோகம், தொழில் லாபம் ஆகியவை கைகூடி வரும் எனவும் கூறுகின்றனர். அதேநேரம், ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி தாக்கத்தால் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் சற்று கவனமாக ஜாக்கிரதையாக இருங்கள்.
News April 14, 2026
இன்று வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை

TN தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு ஜே.பி நட்டா, பியூஸ் கோயல் வெளியிடுகின்றனர். TN முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் குறைகளை கேட்டு, இத்தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதில், 7-வது ஊதிய குழு அமல், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, அரசு பணியில் பெண்களுக்கு முன்னுரிமை, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற உள்ளதாம்.
News April 14, 2026
சிவன் பார்வதியை திருமணம் செய்த திருத்தலம் தெரியுமா?

உத்தராகண்ட், கேதார்நாத் செல்லும் வழியில் 2000 மீட்டர் உயரத்தில், திரியுக நாராயணன் என்ற இடத்தில், சிவனும் பார்வதியும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களின் திருமணத்திற்காக வளர்க்கப்பட்ட ஹோமகுண்டம் இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது. பக்தர்கள் ஹோமகுண்டத்தில் மரத்துண்டுகளை போட்டு வழிபடுகின்றனர். ஹோமகுண்டத்தின் சாம்பலை, தம்பதிகள் இட்டுக் கொண்டால், சகல நன்மைகளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.


