News September 7, 2025
அரசு மருத்துவ முகாமில் பயனடைந்துள்ள 5,738 பேர்

புதுகை மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” 2.8.2025 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு முகாமிற்கு 1400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் என மொத்தம் 5,738 மருத்துவ பயனாளிகள் பயனடைந்துள்ளனர். முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 3, 2025
புதுக்கோட்டை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 3, 2025
புதுகை: அறிவுரை கூறியவருக்கு அருவாள் வெட்டு

விராலிமலை, பெரிய முள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நண்பருடன் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (38), ஏன் வேகமாக சென்றீர்கள்? என கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை கருப்பையா அவரது தம்பி கோவிந்தன், இருவரும் பாண்டியனை அருவாளால் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரையும் மண்டையூர் போலீசார் கைது செய்யது சிறையில் அடைத்தனர்.


