News August 6, 2025
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள்

புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிறக்கும் குழந்தைகளுக்கு நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்க, தமது சொந்த செலவில் தங்க நாணயங்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News August 6, 2025
புதுச்சேரி: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோயில் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 10-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் வராததால், சட்டப்பேரவையை எம்.எல்.ஏ நேரு நேற்று முற்றுகையிட முயன்றுள்ளார்.
News August 5, 2025
புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!
News August 5, 2025
புதுச்சேரி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ சேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <