News June 14, 2024
அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்: 51 பேர் பாதிப்பு

ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் நேற்று வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி என 27 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்று குழந்தைகள் உட்பட 24 பேர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ஒசூர் பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News March 2, 2026
கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 2, 2026
கிருஷ்ணகிரியில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தளி தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்க்கரசன் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை தீவிர படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
News March 2, 2026
ஓசூர்: கடத்தலில் ஈடுபட்ட போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று (மார்ச் 1) சிப்காட் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் 528 கர்நாடக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த நாகரசம்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் நாகராஜ் (41) என்பவரை போலீஸார் கைது செய்தனர். சட்டவிரோத விற்பனைக்காக மது கடத்திய அவர் மீது, தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


