News August 20, 2025
அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்புகள் தொடக்கம்

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி கார்டியாக், டயாலிசிஸ், ஆக்சிடெனட் கேர் ஆகிய 3 படிப்புகளுக்கு
சுகாதாரத்துறை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் அரசு ஒதுக்கீடு 24, சுயநிதி ஒதுக்கீடு 6 என மொத்தம் 30 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், சேர சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 19, 2025
புதுச்சேரி: துயரம் நீக்கும் அதிசய கோயில்!

காரைக்காலில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49ஆவது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும் சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். இதனை ஷேர் பண்ணுங்க.!
News August 19, 2025
புதுச்சேரி ஜிப்மரில் 2 லட்சத்தில் வேலை

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 98 உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு முதுகலை எம்.டி., எம்.எஸ்., எம்.சி.எச் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு 2 இலட்சத்து 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க செப்.25கடைசி தேதியாகும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு Share பண்ணுங்க.!
News August 19, 2025
ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் தற்கொலை

புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (68). இவர் ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் ஆவார். இந்நிலையில், தேவநாதன் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டின் அருகே தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.