News June 22, 2024
அரசு மகளிர் கல்லூரியில் வரும் 24ல் கலந்தாய்வு

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் எம். கோவிந்தராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் மாணவியா் சோ்க்கையின் சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி நடைபெற்றது.
Similar News
News September 7, 2025
நாமக்கல்: திடீர் மின்தடை, அதிக கட்டணமா? உடனே CALL

நாமக்கல் மக்களே, உங்கள் மின் கட்டணம், மின் தடை, புதிய இணைப்பு, மீட்டர் பழுது, கூடுதல் கட்டண வசூல் மற்றும் ஆபத்தான மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் 24 மணி நேரமும் ‘மின்னகம்’ என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். இதற்காக 94987 94987 எண்ணை அழைத்தால் விரைவான, உறுதியான தீர்வு கிடைக்கும். மேலும் உங்கள் புகார்களின் நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் பெறுவீர்கள். SHARE IT!
News September 7, 2025
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், (செப். 6) நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.102 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.15 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News September 7, 2025
நாமக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க