News September 10, 2025

அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா

image

விழுப்புரம், வழுதரெட்டி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(செப்.10) காலை துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

Similar News

News September 10, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

News September 10, 2025

விழுப்புரம்: கல் மண்டபங்கள் சிதைவு – பாதுகாக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மற்றும் நாயக்கர் கால கல் மண்டபங்கள், போதிய பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. பனமலை, திருக்குணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த மண்டபங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மாணவர்கள் விளையாடும் ஆபத்தான இடங்களாகவும் மாறியுள்ளன. எனவே, தொல்லியல் துறை இவற்றைச் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

News September 10, 2025

விழுப்புரம்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

image

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் செக்யூரிட்டீஸ் பிரிவில், ‘டிரெய்னி’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க அக்.6 கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, <>இங்கு<<>> கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!