News August 18, 2025

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

சென்னையில் மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.18) அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெறும் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

Similar News

News August 18, 2025

சென்னையில் எங்கெல்லாம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்?

image

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (19.08.2025) 12 இடங்களில் நடைபெறுகிறது. திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களை சேர்ந்த வார்டுகளில் உள்ள சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுத் தளங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.

News August 18, 2025

சென்னை: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

சென்னை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT!

News August 18, 2025

சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

image

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)

error: Content is protected !!