News April 21, 2025

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை : இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கு<> க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாளாகும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

Similar News

News September 17, 2025

திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

திருவாரூரில் கல்வி கடன் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

image

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!