News April 17, 2024
அரசு பேருந்து மோதி பலியான சாலை பணியாளர்

திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(60). இவர் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு சாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாமிநாதன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News May 8, 2025
மதுரையில் 117 பள்ளிகள் 100% தேர்ச்சி

மதுரையில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று வெளியான நிலையில் இதில் மதுரை மாவட்டம் 14-ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகள் உள்ளது. அதில் 8 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 10526 பேரில் 9680 பேர் தேர்ச்சி பெற்ற பெருமையை மதுரை பெற்றுள்ளது.படிப்பிலும் மதுரை கெத்துதாங்க,மதுரை கெத்துதான் தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News May 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.