News December 11, 2024
அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

பரமக்குடி.மணி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் தனது டூவீலரில் இன்று ராமநாதபுரம் வந்தார். அச்சுந்தன்வயல் வந்தபோது மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் டூவீலரின் பின்புறம் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
ராம்நாடு: FREE கேஸ் சிலிண்டர் BOOK பண்ணிட்டிங்களா?

ராம்நாடு மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News August 22, 2025
ராம்நாடு: ஆக.27ல் 3 ரயில்கள் ரத்து!

ராமநாதபுரம் – சத்திரக்குடி இடையே ஆக.27ல் ரயில்வே பொறியியல் பிரிவு சார்பில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில் (வ.எண் : 56714), திருச்சி – ராமேஸ்வரம் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்கள்:16849/16850), மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை உங்கள் நண்பர்கள்&உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News August 22, 2025
ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.