News April 21, 2025

அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி

image

திண்டிவனம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(23). இவர், திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்தார். நேற்று நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 22, 2025

விழுப்புரம்: பெண்கள் பாதுகாப்புக்கான எண்கள்

image

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே, எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.

News September 22, 2025

விழுப்புரம்: B.E முடித்திருந்தால் மத்திய அரசு வேலை!

image

விழுப்புரம் மக்களே! மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் BEML நிறுவனத்தில் ஜூனியர் நிர்வாகி பணிக்கு 119 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், கணினி அறிவியல், IT-ல் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ஆரம்ப கால சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்க்<<>> மூலம் செப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு. ஷேர் பண்ணுங்க.

News September 22, 2025

விழுப்புரம்: இந்த முக்கியமான சான்றிதழ் பத்தி தெரியுமா….?

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!