News May 6, 2024
அரசு பள்ளி 8 ஆண்டுகளாக சாதனை

வானூர் தாலூகா கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி சபிதா 537 மதிப்பெண்ணும், ஜனனி 520, ஷாலினி 510 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தப் பள்ளி வானூர் வட்டார பகுதியில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்த பள்ளிக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
விழுப்புரம்: பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி!

விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. விழுப்புரம் நகர திமுக அலுவலகம் மற்றும் காந்தி சிலை முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். சைவ,வைனவ சர்ச்சை பேச்சால் இவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
News November 4, 2025
பனை விதைகளை நட்டு வைத்த ஆட்சியர் அப்துல் ரஹ்மான்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோயில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையம் ஏரிக்கரையோரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.04) பனை விதைகளை நட்டு வைத்தார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.வெங்கடேஷ்வரன், உதவி இயக்குநர் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.


