News March 12, 2025
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 : புதுவை முதல்வர்

புதுவை 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் “புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்”, என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
Similar News
News April 8, 2026
புதுச்சேரியில் ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.69 லட்சம் பணம், ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள மதுபானம், ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) நாளை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


