News November 18, 2024

அரசு பள்ளியில் பயிலும் 874 பேருக்கு நீட் பயிற்சி

image

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் 4 மையங்களில் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் 113 அரசுப்பள்ளிகளிலிருந்து 770 பேர், 5 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளைச் சேர்ந்த 43 பேர், 3 நகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 11 பேர், 16 அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 40 பேர் என மொத்தமாக 874 பேர் பயிற்சி பெறுகின்றனர்.

Similar News

News November 19, 2024

பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி

image

கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் மணி (30), குமார் (35), கார்த்தி (35). விவசாய கூலி தொழிலாளர்களான மூவரும், நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வேட்டவலத்தில் இருந்து கண்டாச்சிபுரம் நோக்கிச் சென்றனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் மணி, குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார்த்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News November 19, 2024

புதிய ட்ரெண்டை உருவாக்கிய TVK

image

தவெகவின் செஞ்சி தொகுதி பொறுப்பாளர் குணா சரவணன் தலைமையிலான ஒன்றிய நிர்வாகிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக மனு கொடுத்துள்ள புதிய வாக்காளர்களை வீடுத் தேடி சந்தித்துள்ளனர். நேற்று, புதிய வாக்காளர்களுக்கு மாலை அணிவித்து, பழம், இனிப்புகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய உறுப்பினர்களின் கவனத்தை தவெகவினர் ஈர்த்து வருவதோடு, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர்.

News November 19, 2024

இதுவரை 117 போக்சோ வழக்குகள் பதிவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 91 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 59 வழக்குகளும், கடந்த 2023ஆம் ஆண்டு 44 வழக்குகளும் என படிப்படியாக போக்சோ வழக்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு செப் மாதம் வரை 117 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், முன்னைக் காட்டிலும் தற்போது புகார் கொடுக்க முன் வருகிறார்கள் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.